MT/St.Xavier's Girls' College

மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் வரலாற்றில் ஒரு கண்ணோட்டம்

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை மாதாவின் மூச்சுவிடும் முதன்மை உறுப்பாக விளங்குகின்ற மன்னார் தீபகத்தில் பொன்னார் மேனியுடன் இந்நாள் வரை திகழ்ந்து சோதனைகள் பல வென்று சாதனைகள் மிக படைத்து புகழ்பூத்து புத்தொளியும் புதுப்பொலிவும் இறை இயேசுவின் ஆசிரும் அருளும் பெற்று புனித சவேரியார் அருள் வரம் அடைந்து திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலால் கல்வி என்னும் பொன்பூர் சொரியும் கற்பகமாய் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி தனது அறுபத்தென்பதாவது புதுப்பொலிவுடன் மகிழ்ச்சியும் கொண்டு வீறுநடை போடுகின்றது. மன்னார் மண்ணில் தனக்கான ஒரு தனித்துவத்தினை கொண்டு தலைநிமிர்ந்து மிளிந்துகொண்டிருக்கும் எமது கல்லூரியின் மனித நேய விழுமியங்கனை நெறிப்படுத்திய அறிவுச் செயலூக்கத்தை திருக்குடும்ப அருட்சகோதரிகளின் தெய்வீக ஆன்மீகப் பணியும் கல்விப்பணியும் மெய்ப்பிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

அருட்தந்தை அன்றிக்கேஸ் அடிகளால் இந்தியாவில் உள்ள புன்னகை காயலில் இருந்து புனித பிரன்சிஸ் சவேரியார் ஞானதீட்சை அளிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து மன்னாரின் தென் கடல் பக்கமாக துறைமுகத்தை அன்டிக்கட்டப்பட்டிருந்து புனித யுவானியார் ஆலயத்திற்கு அருகாமையில் பள்ளிக்கூடங்களை அமைத்து தமழை வளர்த்து வந்தார் என கூறப்படுகின்றது. இக்கால கட்டத்திலே அருட்தந்தை பி.எம் யுதேன் அடிகளாரின் போருழைப்பாலும் உறுதி கொண்ட மனத்துணிவினாலும் 1970 ஆம் ஆண்டு ஏழைப்பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும் நோக்கில் அருட்சகோதரிகள் வாழ்ந்த சின்னக்கடையில் அவர்களது சிறிய இல்லத்தில் பாடசலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு “நல்லாயன்” பாடசாலை என அழைக்கப்படும் ஓர் ஆரம்ப பாடசாலையாக இயங்கியது. காலம் கனிந்தது. மக்கள் மனம் மகிழ்ந்தது வசதி படைத்த மக்கள் நலன் கவர்ந்து உதவுவதற்காக ஆங்கிலக்கல்வி கற்கும் நோக்கத்துடன் புனிதஃசவேரியார் பெண்கள் ஆங்கில பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது மன்னார் மக்களுக்கு ஒர் வரப்பிரசாதம் ஆகும். இவ்விரு பாடசாலைகளும் குருக்களின் கண்காணிப்பின் கீழ் நிர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்குடும்ப கன்னியர் வருகையை எடுத்துக் கொண்டால் 20.08.1894ல் அதிவந்தனைக்குரிய பென்சின் பென்சின் ஆண்டகையின் அருளாட்சிக்காலத்தில் திருக்குடும்பக்கன்னியர் மன்னாரிற்கு வருகைதந்து கன்னியர் மடம் பிரதான வீதியில் அமைக்கப்படும் வரை மன்னார் புனித மரியன்னை ஆயய வளவிலேயே ஒலைக்கொட்டில் அமைத்து தங்கியிருந்தனர் என்பதும் வரலாறு.

1907ம் ஆண்டில் ஆண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பாடசாலை 1925ம் ஆண்டில் கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது. 1940ம் ஆண்டில் புனித சவேரியார் கல்லூரி ஆரம்ப பாடசாலைத்தரத்திலிருந்து கனி~;ர பாடசாலைத்தரத்திற்கு உயர்த்தப்பட்டது. ஏழை மக்களின் துயர் துடைக்க தம்மைக்கையளித்து சின்னக்கடையில் ஓர் எளிய இல்லத்தை தெரிந்தெடுத்து அங்கிருந்து பணியாற்றிஅ ங்கேயே கல்விப்பணியையும் ஆரம்பித்த பின் 1949ம் ஆண்டில் இக்கன்னியர் மடம் தற்பொழுது அமைந்துள்ள செபஸ்தியார் வீதிக்கு மாற்றப்பட்டது. அதே வேளை தமிழ் பாடசாலை “நல்லாயன்” பாடசாலை என்ற பெயருடன் சிறிய பாடசாலை அமைந்திருந்த அதே கட்டத்தில் அருட்சகோதரி றெஜிளாவின் தலைமையில் தனித்தியங்கியது. இங்கு 10ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்பட்டது. அருட்தந்தை கருனாகரமன் அடிகளாருடையதும் அருட்சகோதரி கதஸ்ரினா ஆகியோரின் தலைமையில் கலவனாக இயங்கிவந்த புனித சவேரியார் கல்லூரியை 1948ம் ஆண்டு ஆனித்திங்கள் 06ம் நாள் மன்னார் மாவட்டத்தின் பிரதம குருவாக வருகைதந்த அதிவணக்கத்திற்குரிய எஸ். பீற்றர் அடிகளால் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்து கல்வி கற்பது ஒழுக்கத்திற்கு இழுக்கு விளைவிக்கும் என்று 1949ம் ஆண்டு புரட்டாதித்திங்கள் 14ம் திகதி ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றுமாக இரண்டு பாடசாலைகளாக பிரித்தார் நல்லாயன் ஆங்கில பாடசாலை என்ற பெயருடன் இப்பாடசாலை 1951ம் ஆண்டு வரை கன்னியர் மடத்தில் இயங்கி வந்தது.

1951ம் ஆண்டில் புனித சவேரியார் பெண்கள் ஆங்கில பாடசாலை என்ற பெயருடன் இன்றய புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் பிரதான கட்டத்தில் இயங்க ஆரம்பித்தும் சிறிய பாடசாலை நல்லாயன் தமழ் பாடசாலை என அழைக்கப்பட்டது. இவ்வாறாக இரண்டாக பிரிக்கப்பட்டதன் பின் இப்புதிய பாடசாலையின் அதிபராக அருட்சகோதரி “லூசில்லா” கடமையாற்றினார். இவரைத்தொடர்ந்து அருட்சகோதரி மேரி அக்குவைனஸ், மேரி லூட்ஸ், மேரி அசம்ரா, மேரி தியோபன், மேரி வீஜினி, மேரி பாஸ்க்கல், மேரி ஜெயசீலி றொட்றிக்கோ ஆகியோர் அன்பு, அஹிம்சை, அருள்வாழ்வுடன் கடமையாற்றியுள்ளார்கள். இவர்களைத்தொடர்ந்து தற்போதுவரை அருட்சகோதரி கில்டா கடமையாற்றி வருகின்றார்.

. 1960ம் ஆண்டில் அரசாங்கம் சகல பாடசாலைகளையும் பொறுப்பேற்றுக்கொண்டதற்கு அமைய 1963ம் ஆண்டு தைத்திங்கள் 11ம் நாள் இப்பாடசாலை அரசாங்க பாடசாலையாக்கப்பட்டது. இது ஒரே அதிபரின் கீழ் இயங்கிவந்தாலும் 1-5 வகுப்புவரையுள்ள ஆரம்பாடசாலையின் கண்காணிப்பாளராக அருட்சகோதரி வலேரியன் அருட்சகோதரி அசெம்ராவின் மேற்பார்வையில் கீழ் பணிபுரிந்தனர். பெரிய பாடசாலையில் 6-10 ஆம் வகுப்புவரை கற்பிக்கப்பட்டது. இதுவரை கா.பொ.த சாதாரண தரம் வரை இயங்கிவந்த பாடசாலையில் 1973ம் ஆண்டு தைத்திங்கள் 1ம் திகதியுடன் கா.பொ.த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1979ம் ஆண்டு சித்திரை திங்கள் 26ம் திகதியுடன் இப்பாடசாலையில் கா.பொ.த உயர்தர வர்த்தகம், விஞ்ஞானப் பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான வளர்ச்சியினால் உயர்ச்சியடைந்த மன்ஃபுனித சவேரியார் பெண்கள் கல்லூரி என்று இது வரை வழங்கப்பட்ட பாடசாலையின் பெயர் 1985ம் ஆண்டிலிருந்து புனித சவேரியார் மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்பட்டலாயிற்று. இதன் படிமுறைகள் வளர்ந்து சென்று 1995ம் ஆண்டில் புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பு வாய்ந்த அதிபர் அருட்சகோதரி மேரி பஸ்கால் அவர்களின் முயற்சியினாலும் ஆசிரியர் குழுவின் துணையினாலும் 1999ம் ஆண்டு தேசிய பாடசாலையாக உயர்ந்தது. 1610 மாணவிகளையும் 95 ஆசிரியர்களையும் 09 கல்விசாரா ஊழியர்களையும் தன்னகத்தே கொண்டு வானுயர்ந்த கட்டடங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இதனை நோக்கும் போது மன்னார் மாவட்ட மாணவிகள் மட்டுமல்லாது இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்களினதும் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், உயர்விற்கும் இப்பாடசாலை மக்கிய களமாக அமைந்துள்ள என்பதில் ஐயமில்லை.

புனிதஃசவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையின் சிறப்புமிகு சீர்வரிசைகள் ஏராளம் ஏராளம். சாதனைகள் பல படைத்த மன்னார் மண்ணிலே தலை நிமிர்த்து தன்னிகரில்லா தலைவியாக மிளிர்கின்றது எமது கல்லூரி அன்பு எங்கு ஆட்சி புரிகின்றதோ அங்கு மன்னிக்கும் மனப்பாங்கும் இருக்கும். அமைதி நிலவும் சமாதானம் உருவாகும். சமூகப்பூசல்களும் அரசியல் வேறுபாடுகளும் சாதி, சமய, இன வேறுபாடுகளும் சாகடிக்கப்படும் களமாக எமது கல்லூரி விளங்குகின்றது. கிறிஸ்து வழ நின்று புனித சவேரியார் நெறி நடந்து அன்பையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும், சமய சமூக பணி மூலம் கட்டிக்காப்பதும் கட்டியெழுப்புவதுமே புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் மதிப்பிற்குரிய முன்னய கால அதிபர்களதும் தற்போதை அதிபர் அருட்சகோதரி கில்டா சிங்கராஜர் அவர்களதும் ஆசிரிய பெருந்தகைகளதும் முக்கிய குறிக்கோளாகும்.

மன்ஃபுனித சவேரியார் பெண்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவிகளை சிக்கலில் இருந்து விடுவிக்கும் வளிகாட்டிகளாக, நல்வழி காட்டும் துணைவர்களாக, நம்பிக்கையூட்டும் நண்பர்களாக அச்சங்களையும் ஐயங்களையும் அகற்றும் நல் ஆயர்களாக கல்லூரி வாழ்வு குறைவுபடாது பாதுகாக்கும் காவலர்களாக விளங்கி இன்முகம் காட்டி நலவழி கூட்டி, நவநாகரீகம் சூட்டி கல்விப்பணிபுரிந்துவருவது போற்றப்படுதற்குரிதே.

கிறிஸ்தவ தத்துவ மத்துவங்களையும் கடித்திடும் கரும்பென இனித்திடும் இன்தமிழையும் எமது மாவட்ட சிறார்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட எமது கல்லூரி கடந்துவந்த ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உத்வேகத்துடன் இன்றும் இயங்கி வருகின்றது என்பதை மற்க்கமுடியாது. மாணவிகளின் அறிவுசார் திறன்கள் மாத்திரமன்றி அவர்களின் உளத்தில் புதைந்துகிடக்கும் உளவியக்கத்திறன்கள், பொறிமுறைதிறன்கள் அனைத்தையுமே கணிப்பீடு செய்து மாணவிகளது உள்ளார்ந்த கலைத்திறன்களாக இயல், இசை, நாடகம் மற்றும் தலைமைத்துவம், விளையாட்டு ஆகிய அனைத்து அனைத்து துறைகளிலும் வெற்றி என்னும் இலக்கை நோக்கி வீறுநடைபோடும் எமது மன்ஃபுனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் திறனை உலகின் எட்டு திசையிலும் போற்றிப்புகழ்ந்து வாழ்த்துகள் வழங்கப்பட்டு வருவது பெருமைக்குரியதே.

அதிபர், ஆசிரியர் பெருந்தகைகளும் தம் முழுமையான பணியினைக் கல்லூரியின் வளர்ச்சிக்காக வழங்கி கல்வியின் கருவூலமாய், கலைகளின் தாயகமாய், பண்பில் பருதியாய், ஒழுக்கத்தின் உறைவிடமாய் விளங்க ஆற்றும் பணி போற்றுதற்குரியது. எமது கல்லூரி வளர்ச்சியடைந்து கலை, விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், ஆண்மீகம் என்னும் துறைகளை பயிற்றுவிப்பது சிரித்த முகமும், சிறந்த சிந்தனை ஆற்றலும், சிறப்பாக நடந்துகொள்ளும் மனோப்பக்குவமும், சிறப்புமிகு உயர் பண்புகளும் இறையன்பும் உடையவர்கள் அதிபர் ஆசிரியர்களே ஆவார்கள். இவர்கள் இக்கல்லூரியின் உயர்விற்கு உழைத்து “எமது கல்லூரி எமது பிள்ளைகள்” என்னும் ஓயாத ஆர்வமும் பிள்ளைகளின் செயற்பாட்டினுடாக திருப்தியடையும் செயல் வீரமும் கல்லூரியை மேன்மையடைச்செய்து கல்விப்பெறுபேறுகளுக்கும் கலை, பண்பாடு, விளையாட்டுச் சாதனைகளுக்கும், ஒழுக்கத்திற்கும் காரணமானவர்கள் எமது கல்லூரி அதிபர் ஆசிரியர்களே என்பதில் ஐயமில்லை.

ஒவ்வொரு வருடமும் எமது கல்லூரி மாணவிகள் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் என்னும் பிரிவுகளில் பல்கலைக்கழக அனுமதி பெற்று சிறந்த நிலையில் சமூகத்தில் உயர்ந்து விளங்குகின்றார்கள். 1974-2018 வரை மருத்துவ பீடத்திற்கு 36 மாணவிகளும் பல் மருத்துவத்திற்கு 05 மாணவிகளும் பொறியியற்பீடத்திற்கு 15 மாணவிகளும் சட்ட பீடத்திற்கு 06 மாணவிகளும் ஏனைய கலை, வர்த்த, கணித, விஞ்ஞான துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு 1005 மாணவிகளும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது இக்கல்லூரியின் வளர்ச்சியின் உயர்ச்சியை படம் பிடித்துக்காட்டுகின்றது.

மேலும் எமது கல்லூரி மாணவிகளின் கற்றலுக்கு இடப்பற்றாகுறை காரணமாக 2019ம் ஆண்டு பழைய மாணவிகள் சங்கத்தின் அயராத உழைப்பினால் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தனியார் காணி (25.4 பேட்ச்) கொள்வனவு செய்யப்பட்டு கல்லூரியுடன் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவத்தையும் தமிழையும் தமது தமது இரண்டு கண்களாக கருதியவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலை அக்கொள்கையினை நிறைவேற்றும் பணியில் மேலும் பல வெற்றிகளை, சாதனைகளை நிறைவேற்றி இம் மாவட்டத்திலும் இந்நாட்டிலும் பூத்துக் குலுங்கப் போகும் புத்துலகுக்கும் துது வழிகாட்டும் கல்லூரியாத் திகழ எல்லாம் வல்ல இறைமகன் கிறிஸ்துவை வேண்டுகின்றோம்.